ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 14 May 2021 11:42 PM IST (Updated: 14 May 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிவாசல்கள் மூடப்பட்டதால் ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

புதுக்கோட்டை, மே.15-
கொரோனா 2-வது அலை ஊரடங்கால் பள்ளிவாசல்கள் மூடப்பட்டதால் ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று ரம்ஜான் ஆகும். இந்த பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் நோன்பு கடைப்பிடித்து கொண்டாடுவார்கள். இந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா 2-வது அலையின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. அதன்படி பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன.
ரம்ஜான் பண்டிகை தினத்தில் பள்ளிவாசல்கள் அல்லது ஒரு மைதானம் அல்லது திடலில் சிறப்பு தொழுகை நடத்துவது உண்டு. கொரோனா ஊரடங்கின் காரணமாக நேற்று சிறப்பு தொழுகை நடைபெறவில்லை. மாறாக வீடுகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்போன் மூலமும், நேரிலும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதுக்கோட்டையிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி கொண்டாடினர்.
களையிழந்தது
பண்டிகையை யொட்டி வீடுகளில் பிரியாணி தயார் செய்து சாப்பிட்டனர். மேலும் பிறருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். கடந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கின் காரணமாக ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் வீடுகளில் கொண்டாடினர்.
இந்த ஆண்டும் தற்போது ஊரடங்கால் ரம்ஜான் பண்டிகை களையிழந்தது. இதேபோல மாவட்டம் முழுவதும் முஸ்லிம்கள் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி பண்டிகையை கொண்டாடினர்.

Next Story