அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 13 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வருகை
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 13 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வருகை
அடுக்கம்பாறை
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுகின்றனர். அங்கு நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தற்போது கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யும் பணி நடந்து வருகிறது.
மேலும் திருப்பத்தூர் போன்ற அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகளில் ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஒருநாளைக்கு சுமார் 300 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எனவே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாளில் 13 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் லாரிகளில் வரவழைக்கப்பட்டது. இவை அங்குள்ள பிளாண்டுகளில் நிரப்பப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story