கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி எப்போது போடப்படும்?


கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி  எப்போது போடப்படும்?
x
தினத்தந்தி 15 May 2021 12:07 AM IST (Updated: 15 May 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி எப்போது போடப்படும் என்பது குறித்து மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி எப்போது போடப்படும் என்பது குறித்து மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பொதுமக்களுக்கு தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி தொடர்பாக தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு, கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 6 வாரங்களுக்கு பிறகு 8 வாரங்களுக்குள் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதலில் பரிந்துரை செய்தது. அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நிபுணர் குழு, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் 2-வது டோஸ் இடையிலான இடைவெளியை அதிகரிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், 12 வாரங்களுக்கு பிறகு 16 வாரங்களுக்குள் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நடைமுறை பொருந்தாது

இந்த நடைமுறையை அமல்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் கர்நாடகத்தில் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 12 வாரங்களுக்கு பிறகே வந்து 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

அதற்கு முன்னதாக யாரும் தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம். இது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும். கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்த நடைமுறை பொருந்தாது.
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

Next Story