முதல்-மந்திரி எடியூரப்பாவின் முன்னாள் ஊடக ஆலோசகர் பலி


முதல்-மந்திரி எடியூரப்பாவின் முன்னாள் ஊடக ஆலோசகர் பலி
x
தினத்தந்தி 15 May 2021 12:20 AM IST (Updated: 15 May 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பாவின் முன்னாள் ஊடக ஆலோசகர் பலி

பெங்களூரு:

பெங்களூருவை சேர்ந்தவர் மகாதேவபிரகாஷ் (வயது 65). அரசியல் விமர்சகரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல்-மந்திரி எடியூரப்பாவின் ஊடக ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.  

ஓராண்டுக்கும் மேல் பணியாற்றிய நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக அந்த தனியார் மருத்துவமனை அறிவித்தது. அவரது மறைவுக்கு  எடியூரப்பா உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story