திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,224 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,224 பேருக்கு கொரோனா உறுதியானது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,224 பேருக்கு கொரோனா உறுதியானது. 8 பேர் உயிரிழந்தனர்.
புதிதாக 1,224 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,224 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் தொட்டியம் வட்டாரத்தை சேர்ந்த 45 பேரும் அடங்குவர்.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 34,163 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 6,328 பேர் உள்ளனர். 692 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 27,519 ஆகும்.
8 பேர் பலி
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 85, 83, 64 வயதுடைய 3 பெண்கள் மற்றும் 76, 72, 60, 50, 48 வயதுகள் உடைய 5 ஆண்கள் என நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்தது.
419 படுக்கைகள் காலி
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் 28 படுக்கைகள், சாதரண படுக்கைகள்-243 மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் படுக்கைகள் 148 என மொத்தம் 419 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story