ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம்
வாடிப்பட்டி,மே
வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறைக்குட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு விற்பனைக் குழு கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இதில் 8 விவசாயிகள் 29 ஆயிரத்து 494 தேங்காய்களை 10 குவியல்களாக வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் 12 வியாபாரிகள் கலந்துகொண்டு அதிகபட்ச விலையாக ரூ.9.81-க்கும் குறைந்தபட்சமாக ரூ.8.51-க்கும் சராசரியாக ரூ.9-க்கும் ஏலம் எடுத்தனர். அதற்குரிய பணம் உடனடியாக பெற்று விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இது வரை இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 2.65 லட்சம் தேங்காய்கள் வியாபாரம் ஆகியுள்ளது.
Related Tags :
Next Story