சிமெண்டு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்
விருதுநகர் அருகே சிமெண்டு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே சிமெண்டு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஆக்சிஜன் உற்பத்தி மையம்
தமிழக தொழில்துறை அனைத்து மாவட்டங்களிலும், அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும், கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வினியோகம் செய்ய முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை வினியோகிக்க ராம்கோ சிமெண்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நேற்று விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகரில் இந்த நிறுவனத்தின் சிமெண்டு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
வினியோகம்
இந்த மையத்தின் மூலம் தினசரி 42 முதல் 48 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில் பூஸ்டர்யூனிட் இல்லாத நிலையில் 22 முதல் 25 சிலிண்டர்கள் கொள்ளளவு உள்ள ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளது. விரைவில் பூஸ்டர்யூனிட் வந்தவுடன் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு 42 முதல் 48 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கண்ணன், விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், ராம்கோ சிமெண்ட் நிறுவன மூத்த உப தலைவர் ராமலிங்கம், பொதுமேலாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story