கண்மாய்க்கு வரும் நீரில் மீன்கள்; ஆர்வத்துடன் பிடிக்கும் இளைஞர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கண்மாய்க்கு நீரில் வரும் மீன்களை இளைஞர்கள் ஆர்வத்துடன் பிடித்து செல்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கண்மாய்க்கு நீரில் வரும் மீன்களை இளைஞர்கள் ஆர்வத்துடன் பிடித்து செல்கின்றனர்.
வாழை குளம் கண்மாய்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அடிவார பகுதியில் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
அவ்வாறு தண்ணீரோடு ஏராளமான மீன்களும் அடித்து வரப்பட்டன. தொடர்மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் நிரம்பியது. இந்த வாழை குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போது தண்ணீரோடு ஏராளமான மீன்களும் அடித்து வரப்பட்டன.
பொதுமக்கள் மகிழ்ச்சி
பலவகையான சிறிய மற்றும் பெரிய அளவிலான மீன்கள் அடித்து வரப்பட்டதால் கண்மாயில் மீன்களின் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த மீன்களை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பிடித்து செல்கின்றனர். தொடர்ந்து கண்மாய்களில் தண்ணீர் மற்றும் மீன்களின் வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story