கொரோனாவால் மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை


கொரோனாவால் மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 15 May 2021 1:42 AM IST (Updated: 15 May 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் சாலைகண் (வயது 58). இவரது மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட சாலைகண் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வெள்ளியை உருக்க பயன்படுத்தும் திராவகத்தை தண்ணீரில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாலைகண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story