2 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படும்


2 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படும்
x
தினத்தந்தி 15 May 2021 1:48 AM IST (Updated: 15 May 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் 2 இடங்களில் தற்காலிக மார்க்கெட் செயல்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிவகாசி, 
சிவகாசி நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி போலீஸ் ஸ்டேசன் ரோட்டில் உள்ள அண்ணாகாய்கறி மார்க்கெட்டில் 143 காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இங்கு ஒரே இடத்தில் அனைத்து கடைகளும் இருப்பதால் சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இங்கு செயல்பட்டு வந்த 100 காய்கறி கடைகள் மட்டும் அண்ணாமலை- உண்ணாமலை அம்மாள் மேல்நிலை பள்ளி மற்றும் உழவர்சந்தைக்கு மாற்றப்படுகிறது. கொரோனா காலக்கட்டம் முடியும் வரை அண்ணாகாய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மூடப் படுகிறது. எனவே பொதுமக்களும், வியாபாரிகளும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை அண்ணாமலை-உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளி மற்றும் உழவர்சந்தையில் அமைக்கப்படும் காய்கறி மார்க்கெட்டில் வாங்கி கொள்ளலாம்.
 இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story