சாராய ஊறல் அழிப்பு; 3 பேர் கைது


சாராய ஊறல் அழிப்பு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 May 2021 1:51 AM IST (Updated: 15 May 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் சாராயம் காய்ச்ச போடப்பட்டிருந்த ஊறலை போலீசார் அழித்து 3 பேரை கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சாராயம் காய்ச்ச ஊறல் போடப்பட்டு இருப்பதாக ஆலங்குளம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 50), முருகன் (58),மாடசாமி (38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் சாராயம் காய்ச்சுவதற்கு போட்டிருந்த ஊறல்களை அழித்தனர்.  

Next Story