ராசிபுரம் தீயணைப்பு படை வீரர் கொரோனாவுக்கு பலி


ராசிபுரம் தீயணைப்பு படை வீரர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 15 May 2021 2:17 AM IST (Updated: 15 May 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் தீயணைப்பு படை வீரர் கொரோனாவுக்கு பலியானார்.

ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், தூசுர் அருகேயுள்ள கொடிக்கால் புதூரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 49). இவர் கடந்த 1996-ம் ஆண்டு தீயணைப்புத்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது அவர் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு படை வீரராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். கொரோனாவால் பலியான ராஜேஷ் கண்ணாவுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story