ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறிய 1,700 பேர் மீது வழக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறிய 1,700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ரூ.3½ லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறிய 1,700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ரூ.3½ லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கினை மீறி வாகனங்களில் சுற்றிதிரிவோர், பொது இடங்களில் தேவையில்லாமல் நடந்து செல்வோர், முக கவசம் அணியாதவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.
எனினும் ஈரோடு மாவட்டத்தில் காலை நேரங்களில் ரோடுகளில் அதிக அளவில் வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
வழக்கு
இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகள் மற்றும் பல்வேறு இடங்களில் நின்று கொண்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் வெளியே சுற்றிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாமல் வந்த 800 பேர் மீதும், தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காகவர்கள் என 900 வாகன ஓட்டிகள் மீதும் என மொத்தம் 1,700 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை மீறிய இவர்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதில் ரூ.1½ லட்சம் உடனடியாக வசூல் செய்யப்பட்டது. கடந்த 10-ந் தேதி முதல் நேற்று வரை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 2 ஆயிரத்து 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story