வீடுகளில் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
ரம்ஜான் பண்டிகையை யொட்டி முஸ்லிம் மக்கள் அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
திருப்பூர்
ரம்ஜான் பண்டிகையை யொட்டி முஸ்லிம் மக்கள் அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
ரம்ஜான் பண்டிகை
தமிழகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஊரடங்கு காரணமாக முஸ்லிம் மக்கள் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை நடத்த முடியாமல் அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம், அவினாசி, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், வெள்ளகோவில், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் நேற்று காலை புத்தாடை அணிந்து வீடுகள் மற்றும் வீடுகளின் மாடியில் சமூக இடைவெளியை கடைபிடித்து முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்தினார்கள்.
வீட்டில் தொழுகை
ஒவ்வொரு குடும்பத்திலும் பெரியவர் தலைமையில் அவர்கள் வீட்டிலேயே தொழுகையில் ஈடுபட்டார்கள். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பெரும்பாலும் சிறுவர்கள் புத்தாடை அணிந்து கொண்டாடி மகிழ்ந்தனர். இறைச்சிக் கடைகளில் நேற்று காலை கூட்டம் அதிகமாக இருந்தது. பின்னர் பிரியாணி சமைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்தனர்.
ரம்ஜான் பண்டிகையன்று பள்ளிவாசலுக்கு சென்று அனைவரும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். கோரோனாவால் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த முடியாததால் வீடுகளிலேயே தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பள்ளிவாசல்களில் மத குருமார்கள் தொழுகை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story