ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதற்காக 2-வது முறையாக சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 3 லாரிகள்
ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதற்கு வசதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து 2-வது முறையாக சிறப்பு ரெயில் மூலம் 3 லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவள்ளூர்,
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி அதிக அளவு பாதிப்பையும், பலி எண்ணிக்கையும் ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் கடந்த 12-ந்தேதியில் இருந்து ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதற்காக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து 2 மருத்துவ காலி லாரிகள் ஒரு சிறப்பு சரக்கு ரெயிலை தெற்கு ரெயில்வே நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வருவதற்காக நேற்று இரண்டாவது முறையாக திருவள்ளூரில் இருந்து சிறப்பு சரக்கு ரெயில் மூலமாக 3 மருத்துவ காலி லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டது.இதுவரையில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து மொத்தம் 5 மெடிக்கல் காலி லாரிகள் ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து ஆக்சிஜன் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story