8 தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா சிகிச்சை
முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் 8 தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
ஊட்டி
முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் 8 தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
எண்ணிக்கை அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்தது. ஆனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 224 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து நோயாளிகளுக்கு உதவும் வகையில் நீலகிரியில் 8 தனியார் மருத்துவமனைகளில் 170 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா பாதித்த நோயாளிகள் சிகிச்சை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
படுக்கைகள்
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி எஸ்.எம். மருத்துவமனையில் 15 படுக்கைகள் (8110861279), சிவசக்தி மருத்துவமனையில் 20 படுக்கைகள் (9443051940), குன்னூர் நன்காம் மருத்துவமனையில் 15 படுக்கைகள் (9443235084), சகாய மாதா மருத்துவமனையில் 20 படுக்கைகள் (9447276304),
சாய் ஹீலிங் மையத்தில் 25 படுக்கைகள் (9442123336), கோத்தகிரி கே.எம்.எப். மருத்துவமனையில் 25 படுக்கைகள் (9840648297), கூடலூர் அஸ்வினி மருத்துவமனையில் 25 படுக்கைகள் (9487257321), புஷ்பகிரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் (8884860597) தயார்படுத்தப்பட்டு உள்ளது.
இலவச சிகிச்சை
இந்த 8 தனியார் மருத்துவமனைகளிலும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை இலவசமாக வழங்கப்படும். இதனை தகுதி உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். படுக்கைகள் குறித்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வர வேண்டும். அவ்வாறு வரும்போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தொற்று பரவலை தடுக்க உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story