ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம்
ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம்
கோத்தகிரி
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை மீறி அவசியமின்றி வாகனங்களில் வெளியே சுற்றித்திரிபவர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து கடைகளை திறந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள், தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையில் போலீசார் நேற்று கோத்தகிரி நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 700 அபராத தொகை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story