கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்


கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 15 May 2021 3:05 PM IST (Updated: 15 May 2021 3:05 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, கோத்தகிரியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோத்தகிரி

ஊட்டி, கோத்தகிரியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கிருமி நாசினி 

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறி, பலசரக்கு, மளிகை கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். 

இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.  இதையொட்டி தடுப்பு நடவடிக்கையாக ஊட்டியில் நகராட்சி சார்பில் மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. உழவர் சந்தை செயல்பட்டு வரும் என்.சி.எம்.எஸ். வாகன நிறுத்துமிடம், கடை வீதிகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணர்வு

இதேபோன்று கோத்தகிரியில் பேரூராட்சி சார்பில் தினமும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மார்க்கெட், காந்தி மைதான திறந்த வெளி மார்க்கெட், அரசு அலுவலகங்கள், சாலைகள், கிராம வீதிகள் உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ்நிலையம், தாசில்தார் அலுவலகம், போலீஸ் நிலையம், கோர்ட்டு வளாகங்கள் மற்றும் சாலைகளில் பேரூராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். 

மேலும் போலீசார் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடையே கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியும், உரிய முறையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story