புயல் எச்சரிக்கை எதிரொலி; தடுப்பூசி போடும் பணி 2 நாட்கள் நிறுத்தம்
மும்பையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், அரபி கடலில் உருவாகியுள்ள ‘தக்தே’ என்ற புயல் மும்பை அருகே கடந்துசெல்ல வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மும்பையில் பலத்த காற்று, கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்றும்(சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி போடும் நடக்காது என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கூடுல் கமிஷனர் சுரேஷ் ககானி கூறுகையில், “தக்தே புயல் காரணமாக கனமழை, பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் தொல்லைகளை தவிர்க்க இரண்டு நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணியை நிறுத்திவைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது” என்றார்.
Related Tags :
Next Story