6 லட்சத்து 27 ஆயிரம் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண நிதி


6 லட்சத்து 27 ஆயிரம் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண நிதி
x
தினத்தந்தி 15 May 2021 8:31 PM IST (Updated: 15 May 2021 8:31 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 லட்சத்து 27 ஆயிரம் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

செம்பட்டி:

ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி

தமிழகத்தில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், கொரோனா நிவாரண நிதி முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

அதன்டி திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கிற 6 லட்சத்து 27 ஆயிரத்து 4 குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி செம்பட்டி அருகே உள்ள பிள்ளையார்நத்தம், சித்தையன்கோட்டையில் நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு கொேரானா நிவாரண நிதியை வழங்கி தொடங்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில், பிள்ளையார்நத்தத்தில் 678 பேருக்கும், சித்தையன்கோட்டையில் 573 பேருக்கும் என மொத்தம் 1,251 பேருக்கு கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் வழங்கினார்.

நிவாரண பொருட்கள்

விழா முடிவில் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களிடம் கூறுகையில், மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன்கடைகளில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் (ஜூன்) கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் 2-வது கட்ட நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், ஒன்றிய கவுன்சிலர் காணிக்கைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிதி வழங்கிய மாணவன்
இதேபோல் பழனி புதுநகர், அ.கலையம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., பழனி ஆர்.டி.ஓ. ஆனந்தி, சிவகிரிப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் மாரியப்பன், அ.கலையம்புத்தூர் ஊராட்சி தலைவர் வந்தனா முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 இதற்கிடையே பழனி புதுநகரை சேர்ந்த குலோத்துங்கன் மகன் சிவமணி (வயது 12) என்ற மாணவன், தான் உண்டியலில் சேகரித்த ரூ.15 ஆயிரத்தை இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆர்.டி.ஓ. ஆனந்தியிடம் வழங்கினான். அவனை எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

Next Story