வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 15 May 2021 9:44 PM IST (Updated: 15 May 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூரில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகின்றனர். 

15 பவுன் நகைகள் திருட்டு

கீழ்பென்னாத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி ராஜபிரியா (வயது 28). சுரேஷ்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

சிகிச்சை முடிந்து கடந்த 10-ந்தேதி ராஜபிரியா மேலத்தாங்கலில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு கணவர் சுரேஷ்குமாரை அழைத்து வந்து தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று கீழ்பென்னாத்தூரில் உள்ள சுரேஷ்குமார் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து சுரேஷ்குமாரின் அண்ணன் புகழேந்தி போனில் ராஜபிரியாவிற்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக ராஜபிரியா வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் ராஜ பிரியா புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்.

Next Story