குமரலிங்கம் பகுதியில் பராமரிப்பில்லாமல் வீணாகி வரும் உலர் களத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரலிங்கம் பகுதியில் பராமரிப்பில்லாமல் வீணாகி வரும் உலர் களத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
தினத்தந்தி 15 May 2021 10:15 PM IST (Updated: 15 May 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

குமரலிங்கம் பகுதியில் பராமரிப்பில்லாமல் வீணாகி வரும் உலர் களத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிப்பட்டி,
குமரலிங்கம் பகுதியில் பராமரிப்பில்லாமல் வீணாகி வரும் உலர் களத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜ வாய்க்கால்
குமரலிங்கம் பகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.இங்கு அதிக அளவில் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி நடைபெறுகிறது. இதுதவிர நெல், சோளம், ராகி, உளுந்து உள்ளிட்ட தானிய வகைகளும் சாகுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு சாகுபடி செய்யப்படும் பயிர்களின் அறுவடை முடிந்ததும் தானியங்களை உலர் களங்களில் உலர்த்தி விற்பனைக்குக் கொண்டு செல்வார்கள்.இவ்வாறு தானியங்களை உலர்த்துவதற்காக பல ஆண்டுகளுக்கு முன் குமரலிங்கம் ராஜவாய்க்கால் கரையில் அமைக்கப்பட்ட உலர் களம் பராமரிப்பில்லாமல் வீணாகி வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆரம்ப காலங்களில் இந்த பகுதியிலுள்ள பாறைகளில் விவசாயிகள் தானியங்களைக் கொண்டு வந்து காய வைப்பார்கள்.
சமூக விரோத செயல்கள்
இதனையடுத்து விவசாயிகளின் வசதிக்காக இந்த பகுதியில் உலர் களம் அமைக்கப்பட்டது. அதிக அளவில் விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி பயனடைந்தனர்.ஆனால் காலப்போக்கில் இந்த பகுதிக்கான வழித்தடம் முறையான பராமரிப்பில்லாமல் வீணானது.எனவே விவசாயிகள் இந்த பகுதிக்கு வருவதைத் தவிர்த்து விட்டனர்.தற்போது இந்த உலர் களம் பராமரிப்பில்லாமல் சேதமடைந்து வீணாகக் கிடக்கிறது. இது சற்று ஒதுக்குப்புறமான பகுதியாக இருப்பதால் இங்கு மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. 
அத்துடன் உடைந்த பாட்டில்கள் போன்றவற்றை உலர் களத்தின் மீது மட்டுமல்லாமல் அருகிலுள்ள வயல் வெளிகள் மற்றும் ராஜவாய்க்காலிலும் வீசிச் செல்கிறார்கள்.எனவே விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் இந்த உலர் களத்தை சீரமைக்கவும், பாதுகாப்பான வழித்தடம் அமைத்துக் கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story