கல்வராயன்மலையில் 1400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


கல்வராயன்மலையில்  1400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 15 May 2021 10:27 PM IST (Updated: 15 May 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் 1400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன் மலையில் உள்ள பாலப்பட்டு வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பாலப்பட்டு வனசரகர் ராஜா, வனவர் ராமன், வனக் காப்பாளர்கள் சதீஷ், அருண் ஆகியோர் வெள்ளரிக்காடு, வேங்கோடு, பலாபூண்டி ஆகிய வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளரிக்காடு பலாபூண்டி ஆகிய பகுதிகளில் 7 பேரல்களில் 1,400 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த வனத்துறையினர் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர்.

Next Story