கடுமையாக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடு


கடுமையாக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடு
x
தினத்தந்தி 15 May 2021 10:41 PM IST (Updated: 15 May 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் ஊரடங்கு கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டது. நகருக்குள் நுழையும் பாதைகளை போலீசார் தடுப்பு வைத்து அடைத்தனர்.

பரமக்குடி, 
பரமக்குடியில் ஊரடங்கு கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டது. நகருக்குள் நுழையும் பாதைகளை போலீசார் தடுப்பு வைத்து அடைத்தனர்.
கூடுதல் கட்டுப்பாடு
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஊரடங்கை கடுமையாக்கும் வகையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி பரமக்குடி பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரைக்கும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டன. பின்பு அதற்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. 
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாட வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். அதையும் மீறி இருசக்கர வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களும், 4 சக்கர வாகனங்களில் வருபவர்களும், பரமக்குடி நகர எல்லைக்குள் நுழையாதபடி போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து உள்ளனர். 
அனுமதி
அவசர தேவைக்காக செல்பவர்கள் உரிய ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்தால் மட்டும் அவர்களை அனுமதிக்கின்றனர். ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் பரமக்குடி பகுதிகளில் பார்வையிட்டு தடுப்பு பணிகளை மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

Next Story