சிதம்பரம் அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு
சிதம்பரம் அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
புவனகிரி,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் கொ ரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மையத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
படுக்கை வசதிகள்
முட்லூர் கலைக்கல்லூரி வளாகத்தில் படுக்கை வசதிகள் எத்தனை உள்ளது, தற்போது எத்தனை பேர் அங்கு தங்கி உள்ளனவர், அவர்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் சிகிச்சை பெறும் அனைவருக்கும் தரமான உணவு போதுமான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் செந்தில்குமார், சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், புவனகிரி தாசில்தார் அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அமுத பெருமாள் மற்றும் வருவாய்த்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் முன்னதாக சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story