சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை
10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
10 வயது சிறுமி
கோவை பீளமேடு பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் நைசாக பேசி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அதில் சிறுமி அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதற்கிடையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் சிறுமி மயங்கி கிடப்பதை அறிந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாலிபர் போக்சோவில் கைது
மருத்துவமனையில் கண்விழித்த சிறுமி தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இது தொடர்பாக கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பீளமேடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திரா (வயது 26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
Related Tags :
Next Story