கோவையில் விடிய, விடிய பெய்த மழை
கோவையில் விடிய, விடிய பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை
கோவையில் விடிய, விடிய பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழைநீர் தேங்கியது
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் கோவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவெ டுத்து உள்ளது.
இந்த புயலுக்கு டவ்தே என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது.
இந்த மழையால் மாவட்டத்தில் நிலவிய வெப்பம் குறைந்து இதமான காலநிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் குறிப்பாக சின்கோனா, சின்னக்கல்லாறு, வால்பாறை, சோலையாறு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
கோவை ராமநாதபுரம், சிங்காநல்லூர், போத்தனூர், கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைபெய்தது. மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
மழையளவு
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கோவையில் பெய்த மழைஅளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- அன்னூர்-3, மேட்டுப்பாளையம்-5, சின்கோனா-65, சின்னக்கல்லார்-69, வால்பாறை பி.ஏ.பி.-70
வால்பாறை தாலுகா-63, சோலையாறு-99, ஆழியாறு-13.4, சூலூர்-5, பொள்ளாச்சி-17, கோவை தெற்கு-10, விமானநிலையம்-8.2, பெரியநாயக்கன்பாளையம்-7.2, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்-9.
Related Tags :
Next Story