குமரியில் புதிதாக 1,121 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 1,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேர் பலியாகி உள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 1,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை பெருகி வருவதால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்பட அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களிலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்களும், நர்சுகளும் திணறி வருகிறார்கள்.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,121 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் மட்டும் 325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதே போல அகஸ்தீஸ்வரம்-72, கிள்ளியூர்-102, குருந்தன்கோடு-78, மேல்புறம்-66, முன்சிறை-64, ராஜாக்கமங்கலம்-74, திருவட்டார்-135, தோவாளை-75 மற்றும் தக்கலை-116 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். மற்றவர்கள் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.
இவர்களில் நோய்த்தொற்று குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும், தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 853 ஆக உயர்ந்துள்ளது.
14 பேர் பலி
மேலும் குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியாகுபவர்களின் எண்ணிக்கை தினமும் 10-ஐ தாண்டியே உள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 பேர் உயிரை கொரோனா பறித்துள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story