192 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது


192 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது
x
தினத்தந்தி 15 May 2021 11:40 PM IST (Updated: 15 May 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே 192 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி,

தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் காரைக்குடி கல்லூரி சாலையில் சட்ட விரோதமாக மது விற்பதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தி மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த திருவாடானை அருகே உள்ள அடுத்தகுடி கிராமத்தை சேர்ந்த ரவி (வயது 50) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 192 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story