மதுரை கால்நடைத்துறை உயர் அதிகாரி சாவு


மதுரை கால்நடைத்துறை உயர் அதிகாரி சாவு
x
தினத்தந்தி 16 May 2021 12:01 AM IST (Updated: 16 May 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

நுரையீரல் தொற்று காரணமாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மதுரை கால்நடைத்துறை உயர் அதிகாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சிவகங்கை,

நுரையீரல் தொற்று காரணமாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மதுரை கால்நடைத்துறை உயர் அதிகாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மண்டல இணை இயக்குனர் சாவு

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜதிலகம் (வயது 58).
இவர் கால்நடை பராமரிப்புத் துறையின் மதுரை மாவட்ட மண்டல இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ராஜதிலகம் மூச்சுத்திணறல் காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது தொடர்பாக மருத்துவ கல்லுாரி டீன் ரெத்தினவேல் கூறியதாவது:-

கொரோனா தொற்று இல்லை

ராஜதிலகம் கடந்த 5-ந்தேதி மூச்சுதிணறல் காரணமாக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில் நுரையீரலில் தொற்று காரணமாக அவர் தொடர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story