கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
மீன்சுருட்டி:
கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மீன்சுருட்டி பகுதியிலும் புதிய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. கட்டுப்பாடுகளை மீறி நேற்று காலை 10 மணிக்கு மேல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொது மக்கள், முக கவசம் அணியாதவர்கள், சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். மேலும் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், முருகேசன் மற்றும் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி, கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.
Related Tags :
Next Story