சத்தி பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து நாசம்
சத்தியமங்கலம் அருகே சூறாவளிக்காற்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்து நாசம் ஆனது.
சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம், மல்லாநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழைகளை சாகுபடி செய்து உள்ளனர். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் வாழைக்குலைகள் உள்ளன.
இந்த நிலையில் சூறாவளிக்காற்றுடன் அந்த பகுதியில் மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்து நாசம் ஆனது. இதுபற்றி அந்தப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘சூறாவளிக்காற்றால் அறுவடை செய்யும் நிலையில் உள்ள வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து நாசமாகி விட்டது. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளோம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறிந்து விழுந்த வாழைகளை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
Related Tags :
Next Story