திருவள்ளூர் அருகே கொரோனா கட்டுப்பாட்டை மீறி இயங்கிய வாரசந்தை வியாபாரிகளை எச்சரித்து திருப்பி அனுப்பிய போலீசார்


திருவள்ளூர் அருகே கொரோனா கட்டுப்பாட்டை மீறி இயங்கிய வாரசந்தை வியாபாரிகளை எச்சரித்து திருப்பி அனுப்பிய போலீசார்
x
தினத்தந்தி 16 May 2021 3:40 PM IST (Updated: 16 May 2021 3:40 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே அரசு பிறப்பித்த விதிமுறைகளுக்கு முரணாக கொரோனா கட்டுப்பாட்டை மீறி வாரசந்தை அமைத்த வியாபாரிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாகுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ந் தேதியில் இருந்து வருகிற 24-ந் தேதி வரை இரண்டு வார முழு ஊரடங்கு பிறப்பித்து தற்போது அமலில் உள்ளது. மேலும் மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்து இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

வார சந்தைகள்

மேலும் வார சந்தைகள் மூடவும் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் தமிழக அரசு பிறப்பித்த விதிமுறைகளை மீறி 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வார சந்தைகள் அமைக்க காய்கறி கடைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து வியாபாரிகளிடம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வார சந்தை நடத்த அனுமதி கிடையாது என கூறி கடைகளை காலி செய்ய வேண்டும் என்று எச்சரித்தனர். பின்னர் வியாபாரிகள் அனைவரும் வாகனங்களில் கொண்டு வந்த காய்கறி மற்றும் மளிகை பொருட்களோடு புறப்பட்டுச் சென்றனர்.


Next Story