மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை அபராதமாக வசூலித்த போலீசார்


மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை அபராதமாக வசூலித்த போலீசார்
x
தினத்தந்தி 16 May 2021 4:06 PM IST (Updated: 16 May 2021 4:06 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மருந்து வாங்குவதற்காக திருவள்ளுருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 44). இவர் நேற்று மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மருந்து வாங்குவதற்காக திருவள்ளுருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவை மீறி வந்ததாக போலீசார் பாலகிருஷ்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். இதைத்தொடர்ந்து அவர் அபராத தொகை ரூ.500-ஐ போலீசாரிடம் செலுத்திவிட்டு தனது மகனுக்கு மருந்து வாங்க பணம் இல்லாததால் மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதில் மனவேதனை அடைந்த அவர், முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக நடந்த சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டார். இதையறிந்த முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவருக்கு விதித்த அபராதத் தொகையை திரும்ப வழங்கியதுடன், மருந்தையும் வாங்கி கொடுத்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தனர்.


Next Story