கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி; கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி; கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 May 2021 4:14 PM IST (Updated: 16 May 2021 4:14 PM IST)
t-max-icont-min-icon

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான ரூ.2 ஆயிரம் தொகையை வழங்கும் நிகழ்ச்சியை பூந்தமல்லி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கல், கோடுவெளி, காரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான ரூ.2 ஆயிரம் தொகையை வழங்கும் நிகழ்ச்சியை பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வி.ஜே.சீனிவாசன், வெங்கல் பாஸ்கர், நாகலிங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோடுவெளி எம்.குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எம்.எல்.டேவிட், தாமரைப்பாக்கம் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

மேலும், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆ.சத்தியவேலு, திருநிலை, அக்கரப்பாக்கம், ஆமிதாநல்லூர், காடாநல்லார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான ரூ.2,000-த்தை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முனிவேல், திருநிலை ஊராட்சி செயலாளர் அரிச்செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.


Next Story