மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு


மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 16 May 2021 6:00 PM IST (Updated: 16 May 2021 6:00 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு விதிமறைககள் கடுமையாக்கப்பட்டதால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்களை எச்சரித்த போலீசார் அவர்களை வீட்டுக்கே திருப்பி அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாமல்லபுரம்,

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நேற்று முதல் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளது. இதையடுத்து சென்னை- புதுச்சேரி செல்லும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாமல்லபுரம் புறவழிச்சாலை பூஞ்சேரியில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் ஊர் சுற்றிய நபர்களை மடக்கி பிடித்தனர்.

போலீசார் எச்சரிக்கை

அப்போது இரு சக்கர வாகனத்தில் எந்தவித தேவையுமின்றி சுற்றியவர்களை எச்சரித்து சோதனை சாவடி அருகிலேயே அவர்களை எங்கும் செல்லவிடாமல் வீட்டுக்கே திருப்பி அனுப்பினர். இரு சக்கர வாகனத்தில் ஆஸ்பத்திரி மற்றும் இதர தேவைகளுக்கு செல்பவர்களை மட்டும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் செய்ய அனுமதித்தனர்.

இ.பாஸ் அனுமதியுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் கார், வேன், லாரி போன்ற வாகனங்கள் மட்டும் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று காலை 10 மணிக்கு பிறகு அடைக்கப்பட்டதால் அனைத்து தெருக்களும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story