ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.128.59 கோடி
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.128 கோடியே 59 லட்சம் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.
திண்டுக்கல் :
கொரோனா நிவாரண நிதி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் கள்ளிமந்தையம் மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சரவணம்பட்டியில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூ.128 கோடி
நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி 6 லட்சத்து 42 ஆயிரத்து 991 கார்டுதாரர்களுக்கு முதல்-தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு ரூ.128 கோடியே 59 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொப்பம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் தொப்பம்பட்டி, கீரனூர், வேலம்பட்டி ஆகிய 3 முழு நேர ரேஷன் கடைகளையும், சரவணம்பட்டி பகுதிநேர கடைகளையும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 215 ஆயிரத்து கார்டுதாரர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.44 லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு மருத்துவமனை ஆய்வு
இதனை தொடர்ந்து அவர், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.
மேலும் டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறதா? என்று கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story