உடுமலை அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன் விற்பனை


உடுமலை அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன் விற்பனை
x
தினத்தந்தி 16 May 2021 8:53 PM IST (Updated: 16 May 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன் விற்பனை

தளி
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.இந்த சூழலில் நேற்று உடுமலை அருகே பெரியகுளத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன்கள் விற்பனை நடைபெற்றது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்.
கொரோனா பரவலைகட்டுபடுத்த அரசு தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் வேகமாக தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு பொதுமக்களின் அலட்சியமும் பொறுப்பற்றதனமும் ஒரு காரணமாகும். இந்த சூழலில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி பெரியகுளத்தில் மீன்கள் விற்பனை நடைபெற்றது. தகவல் தெரிந்த சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மீன்களை வாங்குவதற்கு அங்கு குவிந்தனர். அப்போது ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டும், முககவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் மீன்களை வாங்குவதில் முனைப்பு காட்டினார்கள். அப்போது ஒருவருக்கு தொற்று அறிகுறி இருந்தால் கூட அனைவருக்கும் பரவும் சூழல் ஏற்பட்டுவிடும். இதனால் கொரோனா இல்லந்தோறும் தொற்றிக் கொள்ளும் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே ஊரடங்கு விதிகளை மீறி பெரியகுளத்தில் மீன்களைப் பிடித்து விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். 

Next Story