உடுமலையில், முழு ஊரடங்கையொட்டி மத்திய பஸ்நிலையம் பகுதி மற்றும் சாலைகள் வெறிச்சோடியிருந்தன.


உடுமலையில், முழு ஊரடங்கையொட்டி மத்திய பஸ்நிலையம் பகுதி மற்றும் சாலைகள் வெறிச்சோடியிருந்தன.
x
தினத்தந்தி 16 May 2021 8:58 PM IST (Updated: 16 May 2021 8:58 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில், முழு ஊரடங்கையொட்டி மத்திய பஸ்நிலையம் பகுதி மற்றும் சாலைகள் வெறிச்சோடியிருந்தன.

உடுமலை
உடுமலையில், முழு ஊரடங்கையொட்டி மத்திய பஸ்நிலையம் பகுதி மற்றும் சாலைகள் வெறிச்சோடியிருந்தன.
முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் பொருட்டு பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும்போது கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலின் 2-வது அலையின் வேகம் அதிகரித்துள்ளதைத்தொடர்ந்து அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் சாலைகள் வெறிச்சோடின
அதன்படி உடுமலையில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள்ஓடாத நிலையில் லாரி, வேன், வாடகைகார், ஆட்டோ ஆகியவையும் ஓடவில்லை. சில நேரங்களில் அவ்வப்போது ஒன்றிரண்டு லாரிகள், தனியார் கார்கள் மட்டும் ஓடின. ஆங்காங்குள்ள மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் திறந்திருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. கொரோனா நிவாரண தொகை வாங்குவதற்காக பொதுமக்கள் நேற்று ரேஷன் கடைகளுக்கு சென்று வந்ததால், காலையில் சாலைகளில் சிறிது பொதுமக்கள் நடமாட்டம் இருந்தது. 
அதன்பிறகு பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. அவ்வப்போது ஒன்றிரண்டு பேர் சென்று வந்து கொண்டிருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வாகனங்கள் ஓடாததால் உடுமலையில் மத்திய பஸ்நிலையம் பகுதி, பொள்ளாச்சி சாலை,பழனிசாலை, திருப்பூர் சாலை, தாராபுரம் சாலை, தளி சாலை, ராஜேந்திரா சாலை, கொழுமம் சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன.
சந்தை
உடுமலை ராஜேந்திரா சாலையில்ஆட்டிறைச்சி கடைகள், கோழிக்கடைகள், மீன்கடைகள் ஆகியவை அதிகம் உள்ளன. முழு ஊரடங்கையொட்டி இந்த கடைகள் உள்ளிட்டு மற்ற கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த சாலையும் வெறிச்சோடி காணப்பட்டது. அத்துடன் ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தையின் ஒரு பகுதியில் இயங்கும் தினசரி காய்கறி சந்தை மற்றும் காய்கறிகமிஷன் மண்டி ஆகியவை அடைக்கப்பட்டு, இந்த வளாகத்தின் நுழைவு வாயில்பூட்டப்பட்டிருந்தது.
உடுமலை கபூர்கான் வீதியில் உழவர்சந்தை உள்ளது. இந்த உழவர் சந்தை இன்று(திங்கட்கிழமை) முதல்மத்திய பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட உள்ள நிலையில் முழு ஊரடங்கையொட்டி, கபூர்கான் வீதியில் உள்ள உழவர் சந்தை நேற்று அடைக்கப்பட்டிருந்தது.
போலீசார் ரோந்து
உடுமலையில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மத்திய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், பொள்ளாச்சி சாலை-திருப்பூர் சாலை சந்திப்பு, தளிசாலை-பொள்ளாச்சி சாலை சந்திப்பில் உள்ள சிக்னல்பகுதி, ரெயில் நிலையம் பகுதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். 
மடத்துக்குளம் 
 கணியூர், மடத்துக்குளம், கடத்தூர், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, மைவாடி, காரத்தொழுவு, துங்காவி,தாந்தோணி, மெட்ராத்தி, சோழமாதேவி ஆகிய பகுதிகளில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு காலை முதலே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் எங்கும் வெறிச்சோடி காணப்பட்டன. மடத்துக்குளம் நால்ரோடு, பஸ் நிலையம், மடத்துக்குளம்-குமரலிங்கம் சாலை, கணியூர்- மடத்துக்குளம் சாலை, கணியூர் பஸ் நிலையம், காரத்தொழுவு நால்ரோடு, மடத்துக்குளம் மற்றும் கடத்தூர் அமராவதி ஆற்றுப் பாலம், ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் ஊரடங்கு விதிகளையும் மீறி மது விற்பனை நடைபெறுகிறதா? வாடகை வேன்களில் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனரா? இறைச்சிக் கடைகள் செயல்படுகின்றனவா? என பல்வேறு செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். 
ஊரடங்கு நாளான நேற்று மடத்துக்குளம் பகுதியில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில், தமிழக அரசு வழங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கான, கொரானா முதற்கட்ட நிவாரன தொகை ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுவதையடுத்து, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் மடத்துக்குளம் மற்றும் கணியூர் பகுதிகளில் உள்ள போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story