திருப்பூரில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி


திருப்பூரில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 16 May 2021 9:16 PM IST (Updated: 16 May 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதலே மாநகரின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென சாரல் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து பல மணி நேரம் சாரல் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் இந்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதுபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுகாலை முதல் இரவு வரை மழை பெய்தது.

Next Story