திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.
x
தினத்தந்தி 16 May 2021 9:32 PM IST (Updated: 16 May 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.
919 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு நாள் ஒன்றின் பாதிப்பு இருந்து வருகிறது. தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டாலும் பாதிப்பு குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த பரிசோதனை முடிவுகளும் வர இருக்கின்றன.
2 பேர் பலி
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 592-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 533 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 292 உள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்து 25 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருப்பூரை சேர்ந்த 44 வயது ஆண் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். திருப்பூரை சேர்ந்த 83 வயது ஆண் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 275-ஆக உயர்ந்துள்ளது.

Next Story