ஓட்டபிடாரத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்


ஓட்டபிடாரத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 16 May 2021 9:42 PM IST (Updated: 16 May 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்ற கொேரானா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்ேகற்றனர்.
ஆலோசனை கூட்டம்
கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம், ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியதாவது:-
விழிப்புணர்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு நலமாக உள்ளார். தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்வதால் கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா பரவலால் மிக மோசமான நிலையை நோக்கி சென்று இருக்கக்கூடிய சூழலை பார்க்கும் போது அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி தடுப்பூசி மட்டுமதான்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் சிலர் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றி திரிகின்றனர். இதனால் ஊரடங்கு சற்று கடுமையாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அரசின் நிபந்தனைகளை கடைபிடித்தால் மட்டுமே பெரும் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்..
கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
பொதுமக்களுக்கு விளக்க...
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொரோனா தொற்று நோயை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொேரானா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை மக்களிடம் பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகளும் விளக்கி கூற வேண்டும்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடந்த முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு செல்கின்றனர். அனைத்து கிராமங்களிலும் தொற்று நோயில் இருந்து நம்மை காப்பாற்றுவதற்காக தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், மருத்துவ பணிக்குழு துணை இயக்குனர் அனிதா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஓட்டபிடாரம் யூனியன் துணைத்தலைவர் காசிவிசுவநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சிதம்பரம், தாசில்தார் மணிகண்டன், யூனியன் ஆணையாளர்கள் சுப்பிரமணியன், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தடுப்பூசி முகாம்
கொரோனா பரவலை தடுக்க, திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தடுப்பூசி முகாம் நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 22 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  கூறியதாவது:-
முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, கொரோனா நோயிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் திருச்செந்தூரில் தடுப்பூசி போடும் பணியை ஆரம்பித்துள்ளோம். பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போடுகிறார்கள். தடுப்பூசி எந்த வகையிலும் யாரையும் எதுவும் செய்யாது.
அரசியல் பிரமுகர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். தடுப்பூசி போடுவதற்கு போலீசாரை கட்டாயப்படுத்தவில்லை. அவர்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி போடப்படுகிறது. தேவையான அளவு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி, டாக்டர் பாவநாசகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் ஆனந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், தி.மு.க. பிரமுகர் எஸ்.ஏ.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா நிவாரண நிதி
முன்னதாக வீரபாண்டியன்பட்டணம் ரேஷன் கடையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதாராகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதீஷ் வி.ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story