ஊரடங்கு உத்தரவை மீறிய வாகனங்கள் பறிமுதல்


ஊரடங்கு உத்தரவை மீறிய வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 May 2021 10:04 PM IST (Updated: 16 May 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பரமக்குடி, 
கொரோனா பரவல் காரணமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதையொட்டி பரமக்குடி நகர் முழுவதும் காலையில் இருந்தே போலீசார் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் பிடித்து அறிவுரை வழங்கினர். மேலும் மருத்துவமனைகளுக்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும், செல்பவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை காட்டி செல்லுமாறு கூறினர். முழு ஊரடங்கில் தேவையின்றி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து அவர்களின் வாகனங்களையும், சாவிகளையும் பறிமுதல் செய்து அவர்களுக்கு நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் அபராதம் விதித்தார்.காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு ஊரடங்கை கண்காணித்து வந்தனர். இதனால் பரமக்குடி நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story