பனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?
கூத்தாநல்லூரில் பனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூரில் பனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால்
கூத்தாநல்லூரில் பூதமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே பனங்காட்டாங்குடி பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்கால் மூலம் வெண்ணாற்றிலிருந்து பனங்காட்டாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு அப்பகுதி விவசாயிகள் ஆற்றிலிருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்று சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் பாசன வாய்க்காலின் தலைப்பான லெட்சுமாங்குடியிலிருந்து இடையே உள்ள வாய்க்கால் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பாசன வாய்க்காலில் எதிர்பார்த்த அளவு தண்ணீரை விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளதாகவும், இதனால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
தூர்வார வேண்டும்
மேலும் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் இடையே சிக்கிய நிலையில் பாசன வாய்க்காலில் சாக்கடை தண்ணீரும் கலந்து அசுத்தமான தண்ணீர் வாய்க்கால் பகுதிகளில் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு பனங்காட்டாங்குடி பாசன வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story