16 நிறுவனங்களுக்கு சீல்


16 நிறுவனங்களுக்கு சீல்
x
தினத்தந்தி 16 May 2021 10:28 PM IST (Updated: 16 May 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறிய 16 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

ராமநாதபுரம், 
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 
கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 171 வழக்குகளும், முககவசம் அணியாமல் சென்ற 23 ஆயிரத்து 808 நபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த 728 நபர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 
மேலும், அத்தியாவசியமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த 93 ஆயிரத்து 766 வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 27 நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேற்படி உத்தரவுகளை மீறி செயல்பட்ட 16 வர்த்தகநிறுவனங்கள் மற்றும் கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. 
சமூக இடைவெளி பின்பற்றாத 13 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு  கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அனைவரும் மதித்து ஒத்துழைக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், கேட்டுக்கொண்டுள்ளார்.  
தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

Next Story