திருக்கோவிலூர் அருகே 2-வது திருமணம் செய்தவர் கைது


திருக்கோவிலூர் அருகே 2-வது திருமணம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 16 May 2021 10:30 PM IST (Updated: 16 May 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே 2-வது திருமணம் செய்தவர் கைது

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த சங்கராபுரம் தாலுக்கா அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 27). இவருக்கு திருமணமாகி பூமாதேவி(22) என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். 
இந்த நிலையில் வெளிநாடு சென்று திரும்பிய சதீஷ்குமார் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த தீபா(27) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. 

சம்பவத்தன்று சொந்த ஊர் திரும்பிய சதீஷ்குமார் தான் 2-வது திருமணம் செய்து கொண்ட விஷயத்தை பூமாதேவியிடம் கூறியதோடு அவரை வீட்டைவிட்டு வெளியேறும் படியும் மிரட்டி தகராறு செய்தார். அப்போது மாமியார் லட்சுமி(50), உறவினர் லதா(48) ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் சதீஷ்குமார் உள்பட 3 பேர் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story