காளையார்கோவில்,
காளையார்கோவிலில் 3 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 4 ஆயிரத்து 600 குடும்ப அட்டைதாரர்கள் பயனாளிகளாக உள்ளனர். இந்த கடைகளில் தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் கடந்த 2 நாட்களாக காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 1,800 குடும்ப அட்டைதாரர்கள் முதல் கட்ட நிவாரண நிதி ரூ.2 ஆயிரத்தை பெற்றுச் சென்றுள்ளனர். வரும் பயனாளிகள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். பயனாளி ஒருவர் கூறுகையில் தமிழக அரசின் நிவாரண நிதி பெற குடும்ப அட்டை மட்டுமே போதுமானது.
விரல் ரேகை பதிவு தேவையில்லை என்ற அறிவிப்பினால் யார் வேண்டுமானாலும் பணம் பெற முடிகிறது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.