பரமத்திவேலூரில் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம்


பரமத்திவேலூரில் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 16 May 2021 11:33 PM IST (Updated: 16 May 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் ஓட்டல் உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள 2 ஓட்டல்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் பரமத்திவேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மணிவேல் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு சென்று உணவகங்களில் ஆய்வு செய்தனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சூர்யா என்பவருக்கு சொந்தமான ஓட்டலுக்கு போலீசார் சீல் வைத்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் மற்றொரு ஓட்டல் உரிமையாளர் வரதராஜனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், ஓட்டல்களுக்கு உணவு வாங்க வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணியாவிட்டால் அவர்களுக்கு உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தினர்.

Next Story