சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்பு
திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே உள்ள பெலாகுப்பம் கிராமத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இது பற்றி தகவல் தெரிவித்து பல மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், அவரது நண்பர் ஒருவர் தனது சரக்கு வாகனத்தில் நேயாளியை ஏற்றி சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், இங்கு தற்போது படுக்கை வசதி இல்லை. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினர்.
இதையடுத்து வேறு வழியின்றி அதே சரக்கு வாகனத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை அவரது நண்பர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இவர் மட்டுமல்ல பல கொரோனா நோயாளிகள் இவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்ற காரணத்தை கூறி கொரோனா நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க மருத்துவமனையில் கூடுதலாக படுக்கை வசதி ஏற்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story