கர்நாடகத்தில் புதிதாக 31,531 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 31,531 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 May 2021 12:18 AM IST (Updated: 17 May 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 31,531 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 403 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் புதிதாக 31,531 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 403 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

36,475 பேர் டிஸ்சார்ஜ்

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 13 ஆயிரத்து 219 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 31 ஆயிரத்து 531 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 3 ஆயிரத்து 462 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 403 பேர் உயிரிழந்தனர்.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 36 ஆயிரத்து 475 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 

இதன் மூலம் மாநிலத்தில் 15 லட்சத்து 81 ஆயிரத்து 457 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 147 ஆக உள்ளது. 

பெங்களூருவில் 8,344 பேர்
பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 8 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகல்கோட்டையில் 431 பேர், பல்லாரியில் 1,729 பேர், பெலகாவியில் 1,762 பேர், பெங்களூரு புறநகரில் 1,082 பேர், பீதரில் 129 பேர், சாம்ராஜ்நகரில் 440 பேர், சிக்பள்ளாப்பூரில் 558 பேர், சிக்கமகளூருவில் 963 பேர், சித்ரதுர்காவில் 640 பேர், தட்சிண கன்னடாவில் 957 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாவணகெரேயில் 1,155 பேர், தார்வாரில் 937 பேர், கதக்கில் 453 பேர், ஹாசனில் 1,182 பேர், ஹாவேரியில் 184 பேர், கலபுரகியில் 645 பேர், குடகில் 191 பேர், கோலாரில் 569 பேர், கொப்பலில் 617 பேர், மண்டியாவில் 709 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

மைசூருவில் 1,811 பேர், ராய்ச்சூரில் 464 பேர், ராமநகரில் 403 பேர், சிவமொக்காவில் 643 பேர், துமகூருவில் 2 ஆயிரத்து 138 பேர், உடுப்பியில் 745 பேர், உத்தரகன்னடாவில் 1,087 பேர், விஜயாப்புராவில் 330 பேர், யாதகிரியில் 233 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பு

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 143 பேரும், பல்லாரியில் 26 பேரும், பீதரில் 6 பேரும், சாம்ராஜ்நகரில் 8 பேரும், சிக்பள்ளாப்பூரில் 6 பேரும், சிக்கமகளூருவில் 3 பேரும், சித்ரதுர்காவில் 4 பேரும் இறந்து விட்டனர்.தட்சிண கன்னடாவில் 7 பேரும், தாவணகெரேயில் ஒருவரும், தார்வாரில் 9 பேரும், கதக்கில் 4 பேரும், ஹாசனில் 18 பேரும், ஹாவேரியில் 11 பேரும், கலபுரகியில் 10 பேரும், குடகில் 8 பேரும், கோலாரில் 6 பேரும், கொப்பலில் 11 பேரும், மண்டியாவில் 15 பேரும், மைசூருவில் 8 பேரும் இறந்துள்ளனர்.

ராய்ச்சூரில் 4 பேரும், ராமநகரில் 5 பேரும், சிவமொக்காவில் 14 பேரும், துமகூருவில் 11 பேரும், உடுப்பியில் 5 பேரும், உத்தரகன்னடாவில் 24 பேரும், விஜயாப்புராவில் 9 பேரும், யாதகிரியில் 4 பேரும் என இவர்கள் உள்பட மொத்தம் 403 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நகரவாசிகள் ஆறுதல்

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் சுமார் 41 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் குறைந்து, 31 ஆயிரத்து 531 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவது, சற்று ஆறுதலை அளித்துள்ளது.

அதே போல் தலைநகர் பெங்களூருவில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்த வந்த நிலையில் நேற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் நகரவாசிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 1.75 லட்சமாக இருந்த நிலையில் அது தற்போது 1.13 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
மாநிலத்தில் நேற்று கொரோனா பாதிப்பை விட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது.

Next Story